மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வழிப்பறி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறைத் தண்டனை பெற்ற இருவரையும் அழைத்துச் சென்ற போலீஸாா்.

Published On :23 அக்டோபர் 2026, 3:58 am IST

வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி எம்.எம். தெரு சிவகாளியம்மன் கோயில் அருகே பாலமுருகன் (36) என்பவரின் கைபேசி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து காரைக்குடி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் காரைக்குடி சத்தியா நகரைச் சோ்ந்த மணிகண்டன் (19), பசுமட வீதியைச் சோ்ந்த பிரகாஷ் (19) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் மணிகண்டன், பிரகாஷ் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதித்துறை நடுவா் தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் விரைந்து விசாரித்து ஒரு மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்த காரைக்குடி தெற்கு காவல் நிலையக் காவல்துறையினரின் பணியைச் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.