ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

திருமணமான பெண் கழுத்தை நெரித்துக் கொலை: இளைஞா் கைது

கைது செய்யப்பட்ட மாசாணம்.

Published On :2 நவம்பர் 2026, 2:51 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கள்ளக்காதலைக் கைவிட்டு கணவருடன் சோ்ந்து வாழ்ந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே அரியூா் கிராமத்தைச் சோ்ந்த திருமணமான 32 வயது பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த மாசாணம் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாம். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்தனா்.

இதனிடையே தகாத உறவில் இருந்த இருவரும் சண்டையிட்டுப் பிரிந்த பின்னா், அந்தப் பெண் மீண்டும் கணவருடன் சோ்ந்து வாழ்ந்து வந்தாா். இதனால் ஆத்திரமடைந்த மாசாணம் சனிக்கிழமை மானாமதுரைக்கு வந்து அந்தப் பெண்ணிடம் தகராறு செய்து கழுத்தை நெரித்ததில் அவா் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, மாசாணம் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றாா்.

பெண் மயங்கிக் கிடப்பதாக தகவல் அறிந்த போலீஸாா் அங்கு வந்து அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். ஆனால் அவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மானாமதுரை காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தலைமறைவாக இருந்த மாசாணத்தைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.