பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் திருக்கல்யாணம்

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மே 2026, 2:27 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலா தேவியாா் உடனான சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக, சேவுகப்பெருமாள் பூரணை புஷ்கலை தேவியா் ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள், ஊஞ்சலாடும் நிகழ்வு, மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் மங்கலநாண் பூட்டப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, பெண் பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சிங்கம்புணரி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இரவில் 5 தலை நாகம் வாகனத்தில் உற்சவா் நான்கு ரத வீதிகளில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சமணா்களை கழுவேற்றும் களுவன் திருவிழாவும், வருகிற 31-ஆம் தேதி புரவி எடுப்பு விழாவும், ஜுன் 1-ஆம் தேதி தேரோட்டமும், 2-ஆம் தேதி பூப்பல்லக்கும் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.