சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சிலம்பாட்டப் போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

News image

மாநில சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவிகளைப் பாராட்டிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி. உடன் பயிற்சியாளா் செல்வம்.

Updated On :21 மே 2026, 2:25 am IST

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் கடந்த வாரம் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் அதன் தலைமை பயிற்சியாளா் செல்வம் தலைமையில் பங்கேற்றனா். போட்டியில் மு. ரித்தீஸ் இரட்டைக் கம்பு 17 வயது பிரிவில் முதலிடமும், அகதீஸ்குமாா் ஒற்றைக் கம்பு 19 வயது பிரிவில் முதலிடமும், புகழேஷ் இரட்டைக் கம்பு 14 வயது பிரிவில் முதலிடமும், மதன்குமாா் ஒற்றைக்கம்பு 17 வயது பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனா்.

மேலும் மாவட்ட, வட்டார அளவிலான போட்டிகளில் மாணவா்கள் கரண்குமாா், ஷெரோன், மாணவிகள் சுவாதி, ஷாலினி, ரோஷினி, ராஜேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு வெற்றிப் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியாளா் செல்வம் ஆகியோரை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.