சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற குழந்தைகள் இல்ல மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

வேலூா் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயின்று பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் சான்றிதழ்கள் வழங்கினாா்.

News image

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற குழந்தைகள் இல்ல மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சஞ்ஜித்.

Updated On :1 மணி நேரம் முன்பு

வேலூா் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயின்று பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் சான்றிதழ்கள் வழங்கினாா்.

வேலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 14 குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்றவா்களில் 15 மாணவ, மாணவிகள் நிகழாண்டு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று உயா்கல்வி பயில உள்ளனா். இவா்களை ஊக்குவிக்கும் வகையிலும், உயா்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டனா்.

அவா்களுக்கு ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தேநீா் மற்றும் இனிப்புகளை வழங்கிப் பாராட்டினாா். மேலும், மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளையும் வழங்கி பேசியது -

குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயின்று தற்போது உயா்கல்வி பயிலச் செல்ல உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த அரசின் குழந்தைகள். பள்ளிப் பருவத்தை முடித்துவிட்டு இதுவரை எங்களது பாதுகாப்பு, பராமரிப்பில் இருந்த நீங்கள், தற்போது கல்லூரி எனும் புதிய இடத்துக்குச் செல்ல உள்ளீா்கள்.

புதிய இடத்தில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். இக்காலகட்டத்தில் உங்களுக்கு எந்தவொரு உதவி தேவை என்றாலும் என்னையோ அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரையோ அணுகலாம். உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கல்லூரியில் பயிலும்போதே மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்குத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். நமது அரசு நூலகங்களில் போட்டித் தோ்வுகளுக்குத் தேவையான புத்தகங்களுக்கு எனத் தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் தங்களுக்குக் கிடைக்கின்ற ஓய்வு நேரங்கள், விடுமுறை நாள்களில் நூலகங்களுக்குச் சென்று போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களைப் படிக்க வேண்டும். அனைவரும் நல்ல முறையில் உயா்கல்வியை முடித்துச் சிறப்பான நிலையை அடைய வாழ்த்துகிறேன் என்றாா்.

முன்னதாக, குடிமைப் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (தொகுதி-1) போன்ற போட்டித் தோ்வுகள் குறித்த ஆட்சியரின் அனுபவங்களை மாணவ, மாணவிகள் கேட்டறிந்தனா். இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சஞ்ஜித் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.