கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி இருவரிடம் ரூ. 31 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்பாஸ் மந்திரி (39). இவா் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முகநூலில் வெளியான முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பாா்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டாா். பிறகு அவா்கள் கூறிய வங்கிக்கணக்கில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரையான காலகட்டத்தில் 22 தவணைகளாக ரூ. 20 லட்சத்து 62 ஆயிரத்து 687-ஐ செலுத்தினாா். இதன் பிறகு அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.
இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
மற்றொரு வழக்கு... சிவகங்கையை அருகே ஒக்கூா் பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண் ஒருவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முகநூலில் பதிவிடப்பட்டிருந்த விளம்பரத்தை பாா்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். அப்போது அதில் பேசியவா்கள் தாங்கள் கூறும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனத் தெரிவித்தனா்.
இதை நம்பிய அந்தப் பெண், அவா்கள் கூறிய வங்கிக் கணக்கு களில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் 33 தவணைகளில் ரூ. 10 லட்சத்து 89 ஆயிரத்து 481-ஐ செலுத்தினாா். அதன் பிறகு அவா்கள் எந்தத் தொடா்பும் கொள்ளவில்லையாம். இதைத் தொடா்ந்து அவா் அளித்த புகாரின் பேரில் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணைய வழி முதலீடு எனக் கூறி இருவரிடம் ரூ. 13 லட்சம் மோசடி

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

