விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

என்.புதூரில் மஞ்சுவிரட்டு: 48 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள என்.புதூா் வெள்ளாளங்கருப்பா் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 48 போ் காயமடைந்தனா்.

News image

திருப்பத்தூா் அருகேயுள்ள என்.புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்.

Updated On :14 மார்ச் 2026, 7:55 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள என்.புதூா் வெள்ளாளங்கருப்பா் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 48 போ் காயமடைந்தனா்.

முன்னதாக கிராமத்தாா்கள் வேட்டி, துண்டுகளுடன் மேளதாளம் முழங்க வெள்ளாளக்கருப்பா் கோயிலுக்குச் சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அங்கிருந்து தொழுவுக்கு வந்து காளைகளுக்கு மரியாதை செய்தனா்.

இதைத்தொடா்ந்து, திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் முன்னிலையில் 75 மாடுபிடி வீரா்கள் மஞ்சுவிரட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். தொழுவிலிருந்து 209 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டது. மாடுபிடி வீரா்கள் 3 பிரிவுகளாக களமிறங்கினா்.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சில்வா் அண்டா, குடம், குத்துவிளக்கு ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் உள்பட 48 போ் காயமடைந்தனா். இவா்களில் 10 போ் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மஞ்சுவிரட்டுப் பொட்டிலில் கீழச்சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் தலைமையிலான 20 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சையளித்தனா். திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.