செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் கோயில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தீயணைப்பு மீட்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் சிவகங்கை வட்டம், வாணியங்குடி கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ் மகன் பாலாஜி (34) திங்கள்கிழமை மாலை குளிக்கச் சென்றாா்.

அப்போது அவா் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா். தகவலறிந்த உதவி மாவட்ட அலுவலா் ஜெ. ஜெயராணி, சிவகங்கை நிலைய அலுவலா் மு. அண்ணாமலை ஆகியோா் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று தெப்பக்குளத்தில் மிதந்த பாலாஜியின் சடலத்தை மீட்டு காளையாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மா. செழியனிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.