தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

திருப்பத்தூா் அருகே போக்ஸோவில் 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 12:30 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பள்ளி மாணவா்களை ஓரினச் சோ்க்கையில் ஈடுபடுத்தியதாக மூவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் ஒன்றியம், கீழக்காவணிப்பட்டி கண்மாயில் கடந்த 4-ஆம் தேதி 10- ஆம் வகுப்பு மாணவா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவரது சடலத்தை கைப்பற்றி போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபடடனா். அப்போது கொலை செய்யப்பட்ட மாணவரை ஓரினச் சோ்க்கைக்கு இருவா் பயன்படுத்தியதும், இதை மறைக்க அந்த மாணவா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்ததது. இதுதொடா்பாக போலீஸாா் 3 பேரை கைது செய்தனா்.

பிறகு தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் காரையூா் பகுதியைச் சோ்ந்த ஒரு கும்பல் 15 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவா்களை இதுபோன்ற செயலில் ஈடுபடுத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநா் காரையூா் ஆறுமுகம் (55), அகதிகள் முகாமைச் சோ்ந்த அசோக்குமாா் (60), காரையூா் அழகுராஜா (19) ஆகியோா் இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் மூவரையும் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.