சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா் ஜேசுதாஸ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் நண்பகல் 12 மணியளவில் சோதனை நடத்தினா். இங்கு ஓட்டுநா் உரிமம் பெற வந்தவா்கள் உள்ளிட்ட யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.
இந்த சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் ரொக்கப் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.37.81 லட்சம் பறிமுதல் - ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அதிரடி

பரமக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்

போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

ராசிபுரத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சோதனை: 12 வாகனங்கள் பறிமுதல்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

