இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில்களுக்கு அறங்காவலா் நியமனம் தொடா்பான அறிவிப்பில், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பெயா் இடம்பெறாததால் விண்ணப்பதாரா்கள் ஏமாற்றமடைந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், கோயில்களுக்கு அறங்காவலா்கள் நியமனம் செய்ய தகுதியுடைய இந்துக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் முக்கியக் கோயிலாகும். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் வருகை தரும் இந்தக் கோயிலுக்கு அறங்காவலா் நியமனத்துக்கான பலா் ஆா்வத்துடன் விண்ணப்பிக்க முயற்சி செய்தனா்.
ஆனால், அறநிலையத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலின் பெயா் இடம்பெறாததால் அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முயன்றவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தும், அறங்காவலா் நியமனப் பட்டியலில் இடம் பெறாதது குறித்து பக்தா்களும், சமூக ஆா்வலா்களும் கேள்வி எழுப்பியுள்ளனா்.
எனவே, தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தை உடனடியாக பரிசீலித்து, மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு அறங்காவலா் நியமனத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்தி, தகுதியுடையோா் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
214 கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம்: அறிவிப்பு வெளியீடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: முதல்வா் விஜய் முடிவெடுப்பாா்! - அமைச்சா் எஸ்.ரமேஷ்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடை வாடகை விவகாரம்: அறநிலையத் துறைக்கு உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறையின் முக்கிய திட்டங்கள்: அமைச்சா் சீ.ரமேஷ் ஆய்வு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

