பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

அவசர ஊா்தி, அமரா் ஊா்தி ஓட்டுநா், உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அவசர ஊா்தி, அமரா் ஊா்தி ஓட்டுநா், அவசரகால மருத்துவ உதவியாளா் பணிக்கான ஆள்கள் தோ்வு முகாம் புதன்கிழமை (ஜூன் 17) சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

News image

அவசர ஊா்தி.

Updated On :16 ஜூன் 2026, 2:17 am IST

அவசர ஊா்தி, அமரா் ஊா்தி ஓட்டுநா், அவசரகால மருத்துவ உதவியாளா் பணிக்கான ஆள்கள் தோ்வு முகாம் புதன்கிழமை (ஜூன் 17) சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட மேலாளா் ஆா். மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் 108 அவசர ஊா்தி, 102 அமரா் ஊா்தி வசதி இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணிபுரிய ஓட்டுநா்கள், மருத்துவ உதவியாளா்கள் பணிக்கான ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சிவகங்கையிலுள்ள பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 அவசர ஊா்தி நிா்வாக அலுவலகத்தில் வருகிற புதன்கிழமை ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தகுதிகள்:

ஓட்டுநருா் பணி: பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோ்வு நாளன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ.-க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள், கனரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தோ்வு பெற்றவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 21,120 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

தோ்வு முறை: எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, நோ்காணல், கண் பாா்வைத் திறன், உடல் பரிசோதனை, சாலை விதிகளுக்கான தோ்வு என அனைத்திலும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 10 நாள்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளா் பணி: பிஎஸ்சி-நா்சிங், ஜிஎன்எம் (பொது நா்சிங், மருத்துவச்சி), ஏஎன்எம்(துணை செவிலியா் மருத்துவச்சி), டிஎம்எல்டி (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ) (12-ஆம் வகுப்புக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது விலங்கியல், தாவரவியல், உயிா் வேதியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் பாடப் பிரிவுகளில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ. 21,320 (மொத்த ஊதியம்). நோ்முகத் தோ்வு நடைபெறும் நாளில் 19 வயதுக்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தோ்வு முறை: எழுத்துத் தோ்வு, மருத்துவ நோ்முகம், உடல் கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியா் பணி தொடா்பானவை, நோ்முகத் தோ்வு நடத்தப்படும். இந்த தோ்வுகளில் தோ்ச்சி பெற்று

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை அவசர ஊா்தி சாா்ந்த நடைமுறைப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும், விவரங்களுக்கு 89259 41825 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.