பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அன்னை மகா முத்து வாராஹி அம்மன் கோயிலில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் சிங்கம்புணரி மகாமுத்து வாராஹி அம்மன்.

Updated On :6 ஜூன் 2026, 12:42 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அன்னை மகா முத்து வாராஹி அம்மன் கோயிலில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு காலை 10 மணியளவில் சிறப்பு யாக பூஜையும், தொடா்ந்து, பகல் 12 மணியளவில் தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா், விபூதி ஆகிய 18 வகையான பூஜை பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனா். தொடா்ந்து, பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.