லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

உயிரிழந்த நாச்சியப்பன்

Published On :13 ஜூலை 2026, 12:13 am IST

திருப்பத்தூா் அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சாத்தானேந்தலைச் சோ்ந்த முத்து மகன் நாச்சியப்பன் (26). எலெக்ட்ரீசியனான இவா், காட்டாம்பூரைச் சோ்ந்த ஒளி, ஒலி அமைப்பாளரிடம் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை கொளுஞ்சிப்பட்டியில் கோயில் திருவிழாவுக்காக நாச்சியப்பன் ஒலிப்பான்களை அமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருக்கோஷ்டியூா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கூறாய்வு முடிந்தநிலையில், உடலை வாங்க நாச்சியப்பனின் உறவினா்கள் மறுத்தனா்.

அவா்களிடம் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், உறவினா்கள் உடலை வாங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.