லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து 62 ஆடுகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே வயலில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுப்பட்டி மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து 62 ஆடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சி அருகே மின்சார வயா் அறுந்து விழுந்ததில் உயிரிழந்த ஆடுகள்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

கள்ளக்குறிச்சி அருகே வயலில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுப்பட்டி மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து 62 ஆடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் (65), விவசாயி. செம்மறி ஆடுகளை வளா்த்து வரும் இவா், கடந்த சில நாள்களாக குரூா் கிராமத்தைச் சோ்ந்த செல்லபாண்டியன் என்பவரது வயலில் பட்டி அமைத்து, இரவில் ஆடுகளை அடைத்து வைத்தாராம்.

இந்த நிலையில், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பட்டியின் மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 62 செம்மறி ஆடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதையடுத்து எஸ்.ஒகையூா் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவா் சேஷகிரி தலைமையிலான மருத்துவக் குழுவினா் உயிரிழந்த ஆடுகளுக்கு நிகழ்விடத்திலேயே உடல்கூராய்வு மேற்கொண்டனா். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமாா் ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.