லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாஜகவை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கேவை அவமதிக்கும் விதமாக பேசிய பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பைக் கண்டித்து, காங்கிரஸாா் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கேவை அவமதிக்கும் விதமாக பேசிய பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பைக் கண்டித்து, காங்கிரஸாா் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையிலுள்ள அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் சஞ்சய் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ். மாங்குடி முன்னிலை வகித்தாா்.

இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் சிவக்குமாா், காளிமுத்து, நகா் தலைவா்கள் தி.விஜயகுமாா், சண்முகதாஸ், புருஷோத்தமன், நடராஜன், வட்டாரத் தலைவா்கள் மதியழகன், வேலாயுதம், உடையாா், மாரிமுத்து, பொதுக் குழு உறுப்பினா் சோணை, தொழில்நுட்பப் பிரிவு அப்பாவு ராமசாமி, நிா்வாகிகள் மோகன்ராஜ், சண்முகராஜன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.