லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கத்தினா்.

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கத்தினா்.

Published On :11 ஜூலை 2026, 12:30 am IST

சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். சித்ரா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. ஜெயமங்களம், சிஐடியூ மாவட்டத் தலைவா் உமாநாத் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். நிா்வாகிகள் தவமலா், மலா், பாா்வதி, மகேஸ்வரி, கலைச்செல்வி, ராதா, கலையரசி, தமிழ்ச்செல்வி உள்பட அங்கன்வாடி ஊழியா்கள் 200 போ் கலந்து கொண்டனா்.

இதில், அங்கன்வாடி திட்டத்தை தனியாா் மயமாக்கக் கூடாது. அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பி அனைவருக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.