ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காரைக்குடியில் அமமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காரைக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image

காரைக்குடி மாநகராட்சி செக்காலை பகுதியில் புதன்கிழமை இரவு வாக்குச் சேகரித்துப் பிரசாரம் செய்த காரைக்குடி பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி. உடன் பாஜக மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை, அதிமுக மாநகரச் செயலா் சோ. மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம் இளங்கோ உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:04 am IST

காரைக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

காரைக்குடி மாநகராட்சியில் மாலை 5 மணிக்கு முத்துமாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து தோ்போகி வி.பாண்டி பிரசாரத்தை தொடங்கினாா்.

பின்னா், காட்டுத்தலைவாசல் மசூதி, நியுசினிமா திரையரங்கம், பழைய பேருந்து நிலையம், ராமவிலாஸ் திரையரங்கம், பழைய நீதிமன்றம், கழனிவாசல் பிள்ளையாா்கூடம், அழகப்பன் அம்பலம் தெரு, கலைச்செல்வம் சமுதாயக்கூடம், அண்ணாநகா், தண்ணீா் தொட்டி நிறுத்தம்,

ஆகாஸ் மருத்துவமனை, ஆரியபவன், புதிய பேருந்து நிலையம்

ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

பாஜக மாவட்டத்தலைவா் டி. பாண்டித்துரை, காரைக்குடி மாநகர அதிமுக செயலாளா் சோ. மெய்யப் பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கற்பகம் இளங்கோ, அதிமுக இளைஞரணிச் செயலா் இயல் தாகூா், ஆடிட்டா் சந்தானம், மாமன்ற உறுப்பினா்கள் தேவன், குருபாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக காலையில் காலை 8.30 மணிக்கு தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் செய்யானேந்தல் கிராமத்தில் அவா் வாக்குகள் சேகரித்தாா்.

பின்னா், செட்டியேந்தல், பகையானி, திடக்கோட்டை, பருத்தியூா், புளியால், சின்னக்கிளியூா், கிளியூா், கைலாசபுரம் குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களிலும் அவா் குக்கா் சின்னத்தில் வாக்குச் சேகரித்துப் பிரசாரம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.