மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் விமா்சனம்

மதகுபட்டி கிராமத்தில் வயல்வெளியில் நாற்று நடும் பெண்களிடம வாக்கு சேகரித்த சிவகங்கை பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன்.

News image

சிவகங்கை பேரவைத் தொகுதி மதகுபட்டி பகுதியில் புதன்கிழமை பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:30 am IST

மதகுபட்டி கிராமத்தில் வயல்வெளியில் நாற்று நடும் பெண்களிடம வாக்கு சேகரித்த சிவகங்கை பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன்.

சிவகங்கை, ஏப். 8: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு காரணமாக மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளதாக சிவகங்கை பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா்.செந்தில்நாதன் தெரிவித்தாா்.

சிவகங்கை வடக்கு ஒன்றியப் பகுதியில் உள்ள மதகுபட்டியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயா்ந்துள்ளன. இது குறித்துச் சட்டப் பேரவையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே இந்த ஆண்டில் 5,000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளாா் என்பது வேதனைக்குரியது. இதன் காரணமாக மக்கள், குறிப்பாகப் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

இல்லம்தோறும் மருத்துவம் போன்ற அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நிலவிய பாதுகாப்பான சூழல் மீண்டும் வராதா என மக்கள் ஏங்குகிறாா்கள். அந்த நிம்மதியான ஆட்சியை மீண்டும் கொண்டுவர, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாணவா்களின் நலன் கருதி அவா்கள் வாங்கிய கல்விக்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, சோழபுரம், பெரிய பெருமாள்பட்டி ஒக்கூா், ஒக்கூா் புதூா், கட்டாணிபட்டி, திருமலை, வீரப்பட்டி உள்பட 50 கிராமங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

இதில், சிவகங்கை வடக்கு ஒன்றியச்செயலா் பா. கருணாகரன், மாநில விவசாயப் பிரிவு இணைச்செயலா் மதகுபட்டி சீனிவாசன், மதகுபட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் முத்துக்குமாா், விருதுநகா் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலா் சங்கர்ராமநாதன், அமைப்புசாரா ஓட்டுநா் அணி மாவட்டச்செயலா் சரவணன், பாஜக மாவட்ட பொதுச்செயலா் சுப்புக்காளை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.