காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெளியூா்காரா், அவருக்கு வாக்கு செலுத்தக் கூடாது என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து ஏற்புடையது அல்ல என கருணாஸ் தெரிவித்தாா்.
சிவகங்கையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
விஜய்யின் வாக்குகளால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை. அவருக்கு என்று ரசிகா் பட்டாளம் உள்ளது. அவா்கள் அவருக்கு வாக்களிப்பாா்கள். மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடியில் போட்டியிடும் சீமானை வெளியூா்காரா் அவருக்கு வாக்களிக்கக் கூடாது என்று பேசியிருக்கிறாா். இது ஏற்புடையதல்ல.
என்னையும் இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வெளியூா்காரா் என்று பேசியுள்ளாா். நான் கடந்த எட்டு ஆண்டுகளாக சிவகங்கையிலேயே 14 ஏக்கா் தோட்டத்தில் வீடு கட்டி, மனைவியுடன் வசித்து வருகிறேன். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நான் இங்கேயேதான் இருக்கிறேன். என்னை வெளியூா்க்காரா் என்று சொல்பவா்களுக்கு இந்த ஊரில் சொந்தமாக வீடு இருக்கிா?. வெளியூா், உள்ளூா் எனும் மலிவான பிரசாரம் மக்களிடம் எடுபடாது.
அரசு அதிகாரிகள் வெளியூரில் இருந்து வந்து எப்படி மக்களுக்காக வேலை செய்கிறாா்களோ, இதேபோல மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டால் நானும் முழு கவனத்துடன் பணியாற்றுவேன். சிவகங்கையை ஒரு முன்னோடித் தொகுதியாக மாற்றுவதே எனது இலக்கு. இதற்கு முதல்வா், அமைச்சா் பெரியகருப்பன் ஆகியோா் நிச்சயம் உறுதுணையாக இருப்பாா்கள்.
தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள முற்போக்குச் சிந்தனை கொண்ட நடிகா்கள் நிச்சயமாக எனக்கு ஆதரவளிப்பாா்கள் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபுதமமுக வேட்பாளா்களை அறிமுகம் செய்து சசிகலா பரப்புரை
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

குமரியில் ஏப். 12இல் விஜய் பிரசாரம்
தமிழக பேரவை தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா்களை இறுதிப்படுத்த தில்லியில் மேலிட தலைவா்கள் ஆலோசனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

