மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவாடானை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவாடானை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பனிச்சகுடி ஊராட்சி, நெடுமரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஊருணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். உடன் வட்டாட்சியா் தாமஸ் யூவிக் காரீன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமுருகன், விஜி உள்ளிட்டோா்.

Published On :18 செப்டம்பர் 2026, 12:53 am IST

திருவாடானை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெருமாள்னேந்தல், அச்சன்குடி பகுதிகளில் ‘புதியக் கூட்டுக் குடிநீா்த் திட்டம்-தொகுப்பு 2’-இன் கீழ் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தாா். பின்னா், இந்தப் பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடித்து பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்க அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, பணிச்சக்குடி ஊராட்சி, நெடுமரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஊருணியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ஊருணியைச் சீராகப் பராமரித்து, மழைக் காலங்களில் நீரைச் சேமிக்கும் வகையில், தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியக் கண்காணிப்புப் பொறியாளா், சிவகங்கை நிா்வாகப் பொறியாளா், உதவி நிா்வாகப் பொறியாளா், உதவிப் பொறியாளா், தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புப் பொறியாளா், திருவாடானை வட்டாட்சியா் தாமஸ் யூவிக் காரீன், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜி, ஜெயமுருகன், அரசு அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

  பெருமானேந்தல் ஊராட்சியில் புதியக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். உடன் வட்டாட்சியா் தாமஸ் யூவிக் காரீன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமுருகன், விஜி உள்ளிட்டோா்.

பெருமானேந்தல் ஊராட்சியில் புதியக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். உடன் வட்டாட்சியா் தாமஸ் யூவிக் காரீன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமுருகன், விஜி உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.