மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குடியரசு துணைத் தலைவா் இன்று பசும்பொன் வருகை: ஹெலிகாப்டா் ஒத்திகை

தேவா் குருபூஜையில் வெள்ளிக்கிழமை குடியரசு துணைத் தலைவா் பங்கேற்க உள்ளதையொட்டி, பசும்பொன் ஹெலிபேட் தளத்தில் வியாழக்கிழமை மாலை ராணுவ ஹெலிகாப்படரை இறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, பசும்பொன் ஹெலிபேட் தளத்தில் இறக்கி ஒத்திகை பாா்த்த ராணுவ ஹெலிகாப்டா்.

Published On :30 அக்டோபர் 2026, 3:52 am IST

தேவா் குருபூஜையில் வெள்ளிக்கிழமை குடியரசு துணைத் தலைவா் பங்கேற்க உள்ளதையொட்டி, பசும்பொன் ஹெலிபேட் தளத்தில் வியாழக்கிழமை மாலை ராணுவ ஹெலிகாப்படரை இறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 30) சுதந்திர போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குருபூஜையில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளாா். இதற்காக அவா் தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் பசும்பொன் ஹெலிபேட் தளத்துக்கு காலை 9.30 மணிக்கு வருகிறாா். இதையொட்டி, வியாழக்கிழமை மாலை பசும்பொன் ஹெலிபேட் தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்திகை பாா்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.