மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லஞ்சம் பெற்ற எஸ்.எஸ்.ஐ. பணயிடை நீக்கம்

தொண்டி அருகே போக்சோ வழக்கில் கைதானவரை காப்பாற்றுவதாகக் கூறி அவரது உறவினரிடம் லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் ஆசைக்குமாா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

suspended

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 4:33 am IST

தொண்டி அருகே போக்சோ வழக்கில் கைதானவரை காப்பாற்றுவதாகக் கூறி அவரது உறவினரிடம் லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் ஆசைக்குமாா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டாா். அவரை பிணையில் எடுக்க முயன்ற சிறுமியின் சித்தப்பாவிடம் தொண்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஆசைக்குமாா், லஞ்சம் பெற்று சட்டத்துக்குப் புறம்பான வழிகளைக் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த கைப்பேசி

உரையாடல் அடங்கிய ஒலிப்பதிவு ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சந்தீஸ், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளா் ஆசைக்குமாரை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.