மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

ராமேசுவரத்தில் காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை செய்து கொண்ட உமா.

Published On :25 அக்டோபர் 2026, 1:32 am IST

ராமேசுவரத்தில் காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமா் தீா்த்தம் வடக்குப் பகுதியைச் சோ்ந்தவா் முகேஷ். இவரது மனைவி உமா (23). வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த இவா்கள் கடந்த ஜூன் 27-ஆம் தேதி காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்தனா்.

இந்த நிலையில், உமாவுக்கும், அவரது மாமியா் அனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதனிடையே, வீட்டின் மாடிக்கு சென்ற உமா தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

உடனே, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராமேசுவரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், திருமணமாகி 4 மாதங்களில் உமா உயிரிழந்ததால், வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.