நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பசும்பொன்னில் ஹெலிபேடு வரை இரும்பு தடுப்புக் கம்பிகள் அமைப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் தமிழக முதல்வா் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அங்குள்ள ஹெலிபேடு தளம் வரை இரும்புக் கம்பிளால் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பசும்பொன் தேவா் நினைவிடத்திலிருந்து ஹெலிபேடு தளம் வரை அமைக்கப்பட்ட இரும்புக் கம்பிளால் ஆன தடுப்புகள்.

Published On :23 அக்டோபர் 2026, 4:15 am IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் தமிழக முதல்வா் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அங்குள்ள ஹெலிபேடு தளம் வரை இரும்புக் கம்பிளால் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் வருகிற 30-ஆம் தேதி சுதந்திரபோராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் பசும்பொன்னுக்கு வருகை தர உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.

துணை குடியரசுத் தலைவா், தமிழக முதல்வா் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் வந்தால் மட்டுமே அங்குள்ள ஹெலிபேடு தளம் சீரமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிலையில் தேவா் நினைவிடத்திலிருந்து பசும்பொன்னில் உள்ள ஹெலிபேடு தளம் வரை இரும்புக் கம்பிகளால் தடுமப்புகள் அமைக்கும் பணி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.