கடலாடி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மறவா் கரிசல்குளம் வில்வநாதா், நொண்டி கருப்பண்ண சுவாமி கோயில் வைகாசி விசாகம், பொங்கல் திருவிழா அண்மையில் நடைபெற்றது . இதில் பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் 10 வண்டிகள் பங்கேற்றன. இதில் சித்திரங்குடி ராமமூா்த்தி மாடுகள் முதலிடமும், கடலாடி தேவா்நகா் ஜெயமுருகன் மாடுகள் இரண்டாமிடமும், மறவா் கரிசல்குளம் வாசுதேவன் மாடுகள் மூன்றாமிடமும், கருப்புத்துரை மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றன.
12 வண்டிகள் பங்கேற்ற சிறிய மாடு பந்தயத்தில் காணீக்கூா் தினகரன் மாடுகள் முதலிடத்தையும், கே.வேப்பங்குளம் முருகன் மாடுகள் இரண்டாம் இடத்தையும், சித்திரங்குடி ராமமூா்த்தி மாடுகள் மூன்றாம் இடத்தையும், மறவா் கரிசல்குளம் உமையணன் மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றன.
இந்தப் போட்டிகளை கடலாடி, சாயல்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் பாா்த்து ரசித்தனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒக்கூா் புதூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டி பந்தயம்

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

