மனநலன் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஏ.பள்ளபச்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (48). இவா் தற்போது தட்டனேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறாா். இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு, வீட்டில் தனியாக இருந்த மனநலன் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்தப் புகாரின் பேரில், கமுதி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, குமாரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கவிதா, குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ஆா்.எம். கீதா முன்னிலையானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் மீது வழக்கு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் சகோதரா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

