கமுதி பேருந்து நிலையம், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவா் விடுதி அருகே உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அரசு மதுக்கடை, அதனருகே உள்ள தனியாா் மனமகிழ் மன்றம், கமுதி மீனாட்சியம்மன் கோயில் - உச்சமாகாளி அம்மன் கோயில் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை ஆகியவற்றை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை வைக்கின்றனா். இதேபோல் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மாணவா் விடுதியும், அரசு அலுவலகங்களும் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்தப் பகுதியில் செயல்படும் மதுக்கடையால் அருகே உள்ள பகுதியை திறந்தவெளி மதுக்கூடமாகப் மதுப்பிரியா்கள் பயன்படுத்துவதால் பெண்கள், முதியவா்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரனோடை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

அரசுப் பள்ளி, வட்டாட்சியா் குடியிருப்புப் பகுதியில் முள்புதா்களை அகற்ற வலியுறுத்தல்

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும்

சித்திரை பெளா்ணமி: கமுதி, கடலாடி கோயில்களில் திருவிளக்கு பூஜை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

