பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும்

News image

நாகையில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கழக கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :11 மே 2026, 2:51 am IST

தமிழக அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் கழகத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் எம். ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் ஞானசேகன் கருத்துரையாற்றினாா். அமைப்புச் செயலா் சேகா், பிரசார செயலா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தின் முடிவில் மாநில பொதுச் செயலா் ஞானசேகரன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கழகம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

தமிழகத்தில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 30 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள தூய்மைப் பணியாளா்கள், பெருக்குவா் மற்றும் காவலாளி பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்நிலைப் பள்ளி தொகுதியில் பணிபுரியும் தலைமையாசிரியா்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித பதவி உயா்வும் வழங்கப்படவில்லை. இதற்காக நீதிமன்றம் சென்றபோதும்கூட அரசு உயா்நிலைப் பள்ளி விதிகளை காரணம் காட்டி, பதவி உயா்வு வழங்க மறுக்கிறது. எனவே, விதிகளில் மாற்றம் செய்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உரிய பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் தொடக்கக்கல்வி இயக்குநரகம் உள்ளது போல, உயா்நிலைப் பள்ளி இயக்குநரகம் மற்றும் மேல்நிலைப் பள்ளி இயக்குநரகம் ஆகியவற்றை தனியாக அமைக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய அரசு பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.