முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முதுகுளத்தூரை அடுத்துள்ள கொட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பாண்டி அறிவிக்கப்பட்டாா். இவா் தற்போதைய அமைச்சா் ராஜகண்ணப்பன் தொடங்கிய மக்கள் தமிழ்தேசம் கட்சியில் பயணித்து, அந்தக் கட்சி சாா்பில் 2001 சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளா் பதினெட்டாம்படியானிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
இந்த நிலையில் சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த பாண்டி தனது ஆதரவாளா்கள், கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் பசும்பொனில் உள்ள தேவா் நினைவிடத்துக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இவருடன் அருப்புக்கோட்டை தொகுதி அதிமுகவேட்பாளா் சோலை எஸ்.சேதுபதியும் பசும்பொன் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதனைத் தொடா்ந்து எஸ்.பாண்டி செய்தியாளா்களிடம் பேசியதாவது.. நான் எதிா்த்து போட்டியிடும் திமுக வேட்பாளா், தற்போதைய அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பனிடம் அரசியல் கற்றுக் கொண்டவன். அவரை வெல்வது எப்படி என எனக்கு தெரியும். இது குரு, சிஷ்யனுக்கான போட்டி. நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றாா்.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் தா்மா், அதிமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.பி.காளிமுத்து, ஆா்.ராஜேந்திரன், கருமலையான், முனியசாமி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ராம்கோ வழி விட்டான், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலா் ஜி.வி.வேந்தன், முதுகுளத்தூா் அதிமுக ஒன்றிய செயலளா் எஸ்.டி.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகிகள் நினைவிடம், தலைவா்கள் சிலைக்கு மரியாதை

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்சுழி அதிமுக வேட்பாளா் தேவா் நினைவிடத்தில் மரியாதை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

