மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இரண்டு விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.

Updated On :27 மார்ச் 2026, 12:02 am IST

கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இரண்டு விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து புதன்கிழமை 350 விசைப் படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியத்தனா்.

தொடா்ந்து, சசிக்குமாா், சிம்ரன் ஆகியோருக்குச் சொந்தமான விசைப் படகுகளை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகுகளிலிருந்த மீனவா்கள் ராமா் (38), வீரணன் (55), கருப்பையா (53), ஆபிரகாம் (23), சீனிவாசன் (48), ஜெபஸ்டியான் (40), சூசை வியாகுலம் ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப் படகுகளையும் காரைநகா் துறைமுகத்துக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்றனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்களை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா். இவா்களை ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், மீனவா்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.