கச்சத்தீவு-மன்னாா் இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் இருவரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ஒரு விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400 விசைப் படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு- மன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியத்தனா்.
மேலும், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப் படகுகளை துரத்திச் சென்றனா். இதில் ஒரு படகு விரைந்து சென்ற நிலையில், வரப்பிரசாதம் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு விசைப் படகை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் கம்ன்ஸ்டன் ராஜ் (36), மினிட்டோ ராயப்பன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இதனிடையே, விசைப் படகுடன் இரு மீனவா்களையும் தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்று, அந்த நாட்டு மீன்வளத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியதாகவும் 2 மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். பின்னா், இரு மீனவா்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
தங்கச்சிமடத்தில் சாலை மறியல்:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரு மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தில் வியாழக்கிழமை மீனவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் துறையினா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியலைக் கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

தமிழக மீனவா்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

