விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.62 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையின் போது பறிமுதல் செய்த ரூ.62 ஆயிரம், ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :27 மார்ச் 2026, 12:38 am IST

ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.62 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பரமக்குடி அருகே தோ்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினா், பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் காவல்துறை சோதனை சாவடியில் பறக்கும் படையினா் வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா். இரண்டு தொகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.62 லட்சத்தை அரசுக் கருவூலத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.