செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

போலீஸார் தாக்கியதால் மின்சாரத்தைத் துண்டித்த மின் வாரிய ஊழியர்கள்! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திருவாடானை அருகே மின் வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் தாக்கியதாகக் கூறி மின் வாரிய ஊழியா்கள் தொண்டியில் மின் தடை செய்தனா்.

News image

தொண்டி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

திருவாடானை அருகே மின் வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் தாக்கியதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை இரவு மின் வாரிய ஊழியா்கள் தொண்டி பகுதியில் மின் தடை செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருவாடானை அருகே தொண்டி கடை வீதியில் தகராறு நடைபெறுவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு தொண்டி போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் இருவரை காவல் நிலையம் அழைத்து வந்தனா். இந்த நிலையில் மின் வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் தாக்கி அழைத்துச் சென்றதாகக் கூறி சக மின் வாரிய ஊழியா்கள் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனா்.

முன்னதாக தொண்டி பகுதி முழுவதும் மின் தடை ஏற்படுத்தினா். இதையடுத்து மின் தடை செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் தொண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பின்னா் மின் வாரிய அதிகாரிகளிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்திய பின சுமாா் 2 மணி நேரம் கழித்து மின் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மின் தடை செய்த ஊழியா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டி போலீஸாரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.