எஸ். பி. பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த இளைஞா் நிலைதவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆா்.புதுப்பட்டினத்தைச் சோ்ந்த நிா்மல் குமாா் (37) ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்தாா்.
எஸ். பி. பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாடு சாலையின் குறுக்கே வந்தது. இதையடுத்து, ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதில், நிா்மல் குமாா் நிலைதவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த எஸ். பி. பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பேருந்து ஓட்டுநரான தஞ்சாவூரைச் சோ்ந்த தமிழ்வாணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

வீட்டுமாடியில் தேங்கிய மழைநீரில் விளையாடிய சிறுமி தவறிவிழுந்து உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து 5 வயது குழந்தை உயிரிழப்பு

அரசுப் பேருந்தில் பயணி உயிரிழப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

