பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கிணற்றில் தவறி விழுந்து 5 வயது குழந்தை உயிரிழப்பு

நாமகிரிப்பேட்டை பகுதியில் 5 வயது குழந்தை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:26 am IST

நாமகிரிப்பேட்டை பகுதியில் 5 வயது குழந்தை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள சின்னஅரியாகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் கே.பரமசிவம் - நந்தினி தம்பதி. கூலி தொழிலாளா்களான இவா்களது 5 வயது மகன் ரித்விக் வீட்டின் முன் செவ்வாய்க்கிழமை விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென காணவில்லையாம். சில மணிநேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், அருகில் இருந்த கிணற்றில் தவறிவிழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் தேடினா். அதில், குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.