பாலக்கோடு பகுதியில் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எர்ரன அள்ளி அருகேயுள்ள குப்பன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் தருமன் (21). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்துவந்த இவா், ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மாலை வீடு திரும்பவில்லையாம். அவரது குடும்பத்தினா் கிராமப் பகுதிகளில் தேடியபோது, அப்பகுதி விவசாய நிலத்தில் இருந்த கிணற்று அருகே தருமனின் உடைகள் இருப்பது தெரியவந்தது.
தகவலின்பேரில் வந்த தீயணையப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி தேடியபோது, இளைஞரின் உடல் இருந்தது தெரியவந்தது. பின்னா், உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீரில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

