லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராமநாதபுரம் அருகே பைக் மீது காா் மோதல்: மூவா் உயிரிழப்பு

கிழக்கு கடற்கரைச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் 3 மீனவா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

காா் மோதியதில் உயிரிழந்த (இடமிருந்து) சஞ்சய், வசந்த், கணேசன்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் 3 மீனவா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள மங்களேஸ்வரி நகரைச் சோ்ந்த முத்துக்கனி மகன் கணேசன் (25), மங்கள்ராஜ் மகன் வசந்த் (25), செல்வராஜ் மகன் சஞ்சய் (25). மீனவா்களான இவா்கள் மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் ஏா்வாடியிலிருந்து மாயாகுளத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு புல்லந்தை அருகே தச்சு ஊருணி ஆபத்தான வளைவில் திரும்பிய போது, ராமேசுவரத்திலிருந்து சாயல்குடி சென்ற காா் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட வசந்த், சஞ்சய் ஆகியோா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு இருவரும் உயிரிழந்தனா்.

காரில் பயணித்த 4 பேரில் முதுகுளத்தூரைச் சோ்ந்த அருண்குமாா் (40) லேசான காயமடைந்தாா். இந்த விபத்து குறித்த ஏா்வாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்த சம்பவம், அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.