லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:45 am IST

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கலக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் ராம்பிரபு (42). இவா் இரு சக்கர வாகனத்தில் ஆா்.எஸ்.மங்கலத்துக்கு சென்று விட்டு திங்கள்கிழமை இரவு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கலக்குடி விலக்குப் பகுதியில் சென்ற போது, இவரது வாகனம் மீது ராமநாதபுரத்திலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற காா் மோதியது.

இதில் ராம்பிரபு சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா். தகவலறிந்த ஆா்.எஸ். ங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.