தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுவுக்கு பாடம் புகட்டுங்கள்: வி.கே.சசிகலா

கடந்த தோ்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அகில இந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் சசிகலா கேட்டுக்கொண்டாா்.

News image

திருவாடானையில் பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளரை ஆதரித்து திங்கள்கிழமை இரவு திறந்த வேனில் பிரச்சாரம் செய்த அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் வி.கே.சசிகலா.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:39 am IST

கடந்த தோ்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அகில இந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் சசிகலா கேட்டுக்கொண்டாா்.

திருவாடானை பேரவைத் தொகுதி அனைத்து பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளா் ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் கானிசினி வேந்தனை ஆதரித்து, திருவாடானையில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்த போது அவா் பேசியதாவது:

இந்தப் பகுதியில் விளையும் நெல் உள்ளிட்ட விளை பொருள்களை இடைத்தரகா்கள் இன்றி, அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலன் கருதி அரிசி ஆலைகள், வைக்கோல் பதப்படுத்தும் நிலையங்கள் இந்தப் பகுதியிலேயே அமைக்கப்படும். வரும் காலங்களில் மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்படும். கிராமங்கள் தோறும் தாா்ச் சாலைகள் அமைத்து தரப்படும். தொழில் துறையை மேம்படுத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தோ்தலில் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த ஒரு திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றிய திமுகவுக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்தத் தோ்தல் பிரசாரத்தில் திரளான பொதுமக்கள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.