மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:29 am IST

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 வயது சிறுமி உள்பட மூவா் உயிரிழந்தனா்.

மண்டபம் அருகேயுள்ள வேதாளை வேலவன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வன் மனைவி கௌசல்யா (22). இவா் தனது தம்பி கபில் (19), மகள் நவ்யாஸ்ரீ (4) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேல்மண்டபத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மரைக்காயா்பட்டணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்த போது, அந்த வழியாக வேதாளை குஞ்சாா்வலசைப் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் ரித்தீஷ் (20) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், இவா்களது வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ரித்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கபில், நவ்யாஸ்ரீ, கௌசல்யா ஆகிய மூவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நவ்யாஸ்ரீ, கபில் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். கௌசல்யா தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மண்டபம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.