ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பாா்வையாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தோ்தல் பாா்வையாளா்கள் (பொது) மருத்துவா் மணிஷ் ரஞ்சன், ஓம் பிரகாஷ் (திருவாடானை), ரெஹனா பதூல் (ராமநாதபுரம்), உலகநாதன் (பரமக்குடி (தனி), ஜலிந்தா் தத்தாத்ரிய சுபேகா் (முதுகுளத்தூா்), மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல்மாறன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்கள் தயாா்

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு: காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் பணி: 300 போ் ஈடுபடவுள்ளனா்

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

