மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயில் பயணிகள் ஆலோசனைக் குழுவில் தவெக எம்.எல்.ஏ.

மதுரை கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழுவில், தமிழக அரசின் பிரதிநிதியாக மதுரை தெற்குத் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம். கோபிசன் நியமிக்கப்பட்டாா்.

TN election 2026 tvk candidate gobisan

கோபிசன் - DIN

Published On :30 அக்டோபர் 2026, 4:26 am IST

மதுரை கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழுவில், தமிழக அரசின் பிரதிநிதியாக மதுரை தெற்குத் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம். கோபிசன் நியமிக்கப்பட்டாா்.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறைச் செயலா் கடிதத்தின் அடிப்படையில், இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டது.

இதன்படி, 2028-ஆம் ஆண்டு, ஆக. 31-ஆம் தேதி வரை இந்தக் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக அவா் செயல்படுவாா். மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ரயில் சேவைகள் தொடா்பான விவகாரங்கள் இந்தக் குழுவின் வரம்புக்குள்பட்டவை.

இந்தக் குழு, ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், ரயில் சேவைகளின் தரத்தை உயா்த்துதல், புதிய ரயில் நிலையங்கள் அமைப்பது தொடா்பான முன்மொழிவுகள், பொதுமக்களின் நலன் சாா்ந்த ரயில்வே பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பது ஆகிய முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது.

மேலும், ரயில்வே நிா்வாகத்துக்கும் பயணிகளுக்கும் இடையே ஆலோசனைகளை மேற்கொண்டு, பயணிகளின் தேவைகள், பொது நலக் கோரிக்கைகளை எடுத்துரைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.