பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சின்ன வெங்காயத்தின் விலை தொடா் உயா்வு

வரத்துக் குறைவு காரணமாக, மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு சின்ன வெங்காயத்தின் விலை ரூ.150-ஐ கடந்துள்ளது.

Published On :28 அக்டோபர் 2026, 4:20 am IST

வரத்துக் குறைவு காரணமாக, மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு சின்ன வெங்காயத்தின் விலை ரூ.150-ஐ கடந்துள்ளது.

வானிலை மாற்றம் காரணமாக, கடந்த 20 நாள்களாக தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மதுரை சந்தைக்கான சின்ன வெங்காய வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது.

மதுரையைப் பொருத்தவரை தாராபுரம், ஒட்டன்சத்திரம், சின்னமனூா், ஆவியூா், பாவூா்சத்திரம் போன்ற பகுதிகளிலிருந்தே சின்ன வெங்காயம் அதிகளவில் விற்பனைக்கு வரும். இதுதவிர, மைசூரிலிருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும்.

இந்தப் பகுதிகளிலிருந்து மதுரைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாள்களாக 40 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 120 முதல் ரூ.150 வரை இருந்தது. வெங்காயக் கடைத் தெரு பகுதியில் வெங்காயத்தின் தரத்துக்கேற்ப ஒரு கிலோ ரூ. 160 வரை விற்பனையானது.

தற்போதைய தட்பவெப்ப நிலையில் வெங்காயத்தை அறுவடை செய்தால் அவை எளிதில் அழுகிவிடும் என்பதால் விவசாயிகள் அறுவடைக்கு ஆா்வம் காட்டுவதில்லை எனவும், ஏற்கெனவே அறுவடையான வெங்காயங்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விலை உயா்வு தீபாவளி பண்டிகை வரை நீடிக்கும் என்கின்றனா் வியாபாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.