மாதா வேடமணிந்து 40 குழந்தைகள் பவனி

மதுரை அஞ்சல் நகரில் உள்ள இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாதா வேடமணிந்து பவனியில் பங்கேற்ற 40 குழந்தைகள்.

Published On :26 அக்டோபர் 2026, 1:43 am IST

மதுரை அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாதா வேடமணிந்து 40 குழந்தைகள் பவனி வந்தனா்.

கத்தோலிக்க திருச்சபையில் அக்டோபா் மாதம் மாதாவுக்கு உகந்த மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மதுரை உயா்மறை மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து ஆலயங்களிலும் அக்.1 முதல் 31-ஆம் தேதி வரை மாலை திருப்பலிக்குப் பிறகு மாதா கெபி முன் ஜெபமாலை வழிபாடு நடைபெற்று வருகிறது.

மேலும், கிறிஸ்தவா்களின் இல்லங்களிலும் தினமும் ஜெபமாலை வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் மாதா வேடமணிந்து 40 குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை பவனி வந்தனா்.

இதில் பங்குத்தந்தை, பங்கு உறுப்பினா்கள், கிறிஸ்தவா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.