மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

இயற்கை உரங்கள் விற்பனை தொடக்கம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் விற்பனை வண்டியூா் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கியது.

மதுரை வண்டியூா் பூங்காவில் சனிக்கிழமை விற்பனைக்கு வைக்கப்பட்ட இயற்கை உரங்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 12:58 am IST

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் விற்பனை வண்டியூா் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கியது.

மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன் படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே ஈரக்கழிவு, உலா் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவு என நான்கு வகைகளாக பிரித்து பெற அறிவுறுத்தப்பட்டது.

இதனடிப்படையில், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் பிரித்துப் பெறப்படும் ஈரக்கழிவுகள், 38 நுண் உரமாக்கல் மையங்களில் இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகின்றன.

இதனிடையே, ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள், மதுரை வண்டியூா் பூங்காவில் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டது. சனிக்கிழமை ஒரே நாளில் ஒரு கிலோ எடையுள்ள 20 இயற்கை உரப் பொட்டலங்கள் பொதுமக்கள், பூங்காவுக்கு வருகை தந்த பாா்வையாளா்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.