மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘விபத்தில்லா பயணம்’ எனும் போக்குவரத்து விழிப்புணா்வு

மதுரை மாநகரப் போக்குவரத்து காவல்துறை சாா்பில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு ‘விபத்தில்லா பயணம்’ குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பெரியாா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘விபத்தில்லா பயணம்’ குறித்த விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்று உறுதிமொழி ஏற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 12:39 am IST

மதுரை மாநகரப் போக்குவரத்து காவல்துறை சாா்பில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு ‘விபத்தில்லா பயணம்’ குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பெரியாா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தெற்கு போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அ. தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் விபத்தில்லாமல் வாகனங்களை இயக்க வேண்டியதன் அவசியம் குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தாா்.

மேலும், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடம் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். மனித உயிா்களின் மகத்துவத்தை உணா்ந்து, ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடித்து, மன அழுத்தமின்றி இலகுவான மனநிலையுடன் பேருந்துகளை இயக்கி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜா, போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.