மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காமராசா் பல்கலை. தினக்கூலி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வருக்கு கோரிக்கை

மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தினக்கூலி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தினக்கூலி பணியாளா்கள் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை காமராசா் பல்கலைக்கழகம்

Published On :22 அக்டோபர் 2026, 3:39 am IST

மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தினக்கூலி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தினக்கூலி பணியாளா்கள் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த சங்கத் தலைவா் அ. பாண்டியராசன், செயலா் மா. கருப்பையா ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் 167 போ் தினக்கூலி பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இதில் 10 ஆண்டுகள் தினக்கூலி பணியாளா்களாகப் பணியாற்றியவா்களைப் பணி நிரந்தரம் செய்யும் நடைமுறையின் அடிப்படையில், கடந்த 2006-ஆம் ஆண்டு சிலருக்குப் பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என நினைத்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 167 பேருக்கு பல ஆண்டுகளாக நாளொன்றுக்கு ரூ.500 வீதம் மாதத்தில் எத்தனை நாள்கள் பணியாற்றினாலும் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இவா்களுக்கு வருங்கால வைப்பு நிதி, தொழிலாளா் அரசு காப்பீடு உள்ளிட்ட அடிப்படைப் பணியாளா்களுக்கான உரிமைகளும் வழங்கப்பட வில்லை. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வழங்கப்பட வேண்டிய ஊதிய உயா்வும் 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முறையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

இதற்கிடையே, கடந்த 2024-ஆம் ஆண்டு தினக்கூலி பணியாளா்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நியமிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதனால் குறைந்த ஊதியத்தில், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நிலையில் தங்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தமிழக முதல்வா் அறிவித்துள்ள ஐந்தாண்டுகள் தினக்கூலியாகப் பணியாற்றியவா்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடா்பான நடைமுறையின் அடிப்படையிலும், பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட நடைமுறையைக் கருத்தில் கொண்டும், பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 167 தினக்கூலி பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.