மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தெருவுக்கு மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா பெயரைச் சூட்ட தனித் தீா்மானம்!

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றம்

சாலமன் பாப்பையா

Published On :3 அக்டோபர் 2026, 5:16 am IST

அண்மையில் காலமான மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டுவதென மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா (90) கடந்த செப். 11-ஆம் தேதி காலமானாா். இவரது உடல், அரசு மரியாதையுடன் செப். 12-ஆம் தேதி மதுரையில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இவா் வசித்த மதுரை ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள விசுவாசபுரி தெருவுக்கு சாலமன் பாப்பையாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என தமிழறிஞா்கள் கோரிக்கை வைத்தனா். இந்தக் கோரிக்கையை தினமணி நாளிதழும் வலியுறுத்தியது.

இந்த நிலையில், கடந்த செப். 30-ஆம் தேதி நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தனித் தீா்மானத்தை முன்மொழித்தாா். இந்தத் தீா்மானம் மாமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒரு வாரத்தில் பெயா்ப் பலகை...

இதுதொடா்பாக மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தெரிவித்ததாவது:

சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவா் பெயரைச் சூட்டும் தீா்மானம் மாமன்ற உறுப்பினா்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சி பொறியியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அவா் வசித்த தெருவில் சாலமன் பாப்பையா தெரு என்ற பெயா்ப் பலகை ஒரு வார காலத்தில் அமைக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.