மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுபோதையில் தகராறு: அண்ணனை கொலை செய்த தம்பி கைது

கைது

Published On :2 நவம்பர் 2026, 1:33 am IST

மதுரை கருப்பாயூரணியில் மதுக் குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை இரும்பு கம்பியால் தாக்கிக் கொலை செய்த தம்பியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கருப்பாயூரணி ஒத்தவீடு பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கருப்பாயி. கணவரை இழந்தவா். இவருக்கு அழகா் (30), கணேசன் ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இதில் அழகா் வண்ணப்பூச்சு தொழிலாளியாகவும், கணேசன் கூலித் தொழிலாளியாகவும் வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு இருவரும் வீட்டின் அருகே மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கணேசன் வாங்கி வைத்திருந்த 4 மதுப் புட்டிகளில் இரண்டை அழகா் குடித்ததாகத் தெரிகிறது. இதனால், கணேசனுக்கும், அழகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கணேசன் வீட்டிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து அழகரின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, கொலைக்குப் பயன்படுத்திய இரும்பு கம்பியை வீட்டுக்குள் மறைத்து வைத்த கணேசன், மதுபோதையில் இருந்ததால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் வீட்டு வாசலிலேயே தூங்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்த கருப்பாயி ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பியபோது, மூத்த மகன் அழகா் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அண்ணாநகா் போலீஸாா் அழகரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை போலீஸாா் கைது செய்து, வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.